• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டப்படுவதாக புகார்

March 15, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு தடை விதித்து ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டு இருந்த நிலையில் தொடர்ந்து அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் சமீப காலமாக அரசு அலுவலகங்களில் தனியாரின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டப்பட்டு இருப்பது அதிகரித்து இருப்பதாகவும்,அரசு அலுவலகங்கள் மற்றும் சுவர்களில் சுவரொட்டிகள் ஓட்டுவது சட்டத்திற்கு புறம்பான செயல் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்து அது குறித்து கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதில்கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளம்பர படங்கள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும்,மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் தடையை மீறி பலரும் அரசு அலுவலர்களின் வேலைநிறுத்தம்,ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.இதனால் ஆட்சியரின் அறிவிப்பு காற்றில் பறக்க விடப்பட்டு உள்ளதாக புகார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் படிக்க