• Download mobile app
17 Feb 2026, TuesdayEdition - 3660
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

42,000 வாடிக்கையாளர்களுக்கு 238 கோடி ரூபாய்க்கு மேல் தீர்வு – கோவையில் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சி.ஓ.ஓ பேட்டி

December 19, 2024 தண்டோரா குழு

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான இடையில் கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த 42,000 வாடிக்கையாளர்களுக்கு 238 கோடி ரூபாய்க்கு மேல் தீர்வு (Claim) வழங்கியுள்ளதாக, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சி.ஓ.ஓ.அமிதாப் ஜெயின் கோவையில் தெரிவித்துள்ளார்.

காப்பீடு திட்ட நிறுவனங்களில் முன்னனி நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மற்றும் பயனாளிகள் பெறும் பலன்கள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில்,ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் ஜெயின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நகர்புற மற்றும் ஊரக பகுதி வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக,ஸ்டார் ஆரோக்யா டிஜி சேவா திட்டம் இப்போது தமிழ்நாடு முழுவதும் 74 கிராமங்களுக்கு சேவைகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

சமூகத்தில் ஆரோக்கியமான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதே எங்கள் நிறுவனத்தின் நோக்கம்,அந்த அடிப்படையில் அனைவருக்குமான திட்டமாக சூப்பர் ஸ்டார் ஹெல்த் பாலிசியை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளதை குறிப்பிட்டார்.

இந்த பாலிசியின் வாயிலாக ,முன்பே இருக்கும் நிலைமைகளுக்கு Quick Shield கவரேஜ், நிதிப் பாதுகாப்பின் மீதான உன்மையான வரம்பற்ற காப்பீட்டுத் தொகை மற்றும் கடுமையான நோய் அல்லது விபத்து மரணம் ஏற்பட்டால் பிரீமியம் தள்ளுபடி பலன்கள் உள்ளிட்ட தனித்துவமான அம்சங்களை வழங்குவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான இடையில் கோவை மற்றும் சேலத்தைச் சேர்ந்த 42,000 வாடிக்கையாளர்களுக்கு 238 கோடி ரூபாய்க்கு மேல் தீர்வு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, ஸ்டார் ஹெல்த் மற்றும் அலைடு நிறுவனத்தின் தமிழ்நாடு எக்ஸிகியூடிவ் பிரசிடெண்ட் மற்றும் ரீஜனல் ஹெட் பாலாஜி பாபு மற்றும் கோவை மண்டல மேலாளர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க