• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

420 ரஜினிகாந்த் சூதாட்ட விடுதியில் சிகிச்சை பெறுகிறாரா?

July 6, 2017 தண்டோரா குழு

அமெரிக்க கேசினோவில் ரஜினிகாந்த் சிகிச்சை பெறுகிறாரா? என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டிவிட் செய்துள்ளார்.

மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். சில நாட்கள் சிகிச்சை பெற்ற பின், அடுத்த வாரம் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவில் கேசினோ ஒன்றில் ரஜினி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனை நெட்டிசன்கள் பரப்பி கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், ரஜினியின் கேசினோ விசிட் பற்றி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டார் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், வாவ்! 420 ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று சூதாட்ட விடுதியில் வைத்து மருத்துவ சிகிச்சை பெறுகிறார். அமலாக்கத்துறை அவரிடம் இருக்கும் பணம் எப்படி வந்தது என்று விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணியசாமி ரஜினியை தொடர்ந்து 420 என கூறி வருவது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க