February 3, 2018
தண்டோரா குழு
கோவை பாப்பீஸ் ஹோட்டலில் கேரளா உணவு திருவிழா “நாடன் பக்ஷ்னா மேளா ” நேற்று(பிப் 2) துவங்கியது.
கோவை பாப்பீஸ் ஹோட்டல் நடத்தும் “கேரளா நாடன் பக்ஷ்னா மேளா” உணவுத் திருவிழா நேற்று துவங்கியது. இந்த உணவு திருவிழாவை கோவை உமன்ஸ் சென்டர் மருத்துவ இயக்குனர் டாக்டர்.மிருதுபாஷினி கோவிந்தராஜன் மற்றும் நிர்வாக இயக்குனர் கே.எஸ். கோவிந்தராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.சைவம் மற்றும் அசைவ உணவுகளின் திருவிழாவாகக் கொண்டாடப்பட உள்ள இந்த விழாவில், மீன், கோழி, சிவப்பு இறைச்சிகள் சார்ந்த உணவுகள் பரிமாறப்பட்டன.
இது குறித்து கோவை பாப்பீஸ் ஹோட்டல், ஆப்ரேஷன் மேனேஜர்,ஆர்.ஜெயராமன் கூறுகையில்,
கேரளாவின் முக்கிய திருவிழாவான விஷுவையொட்டி, இந்த உணவுத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழாவில் 67 வகையான சைவ மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட உள்ளன. உடனடியாக உணவுகளை தயாரித்து பரிமாறும் 5 உணவு கவுன்டர்களும் உள்ளன.
உலக மற்றும் தேசிய அளவில் புகழ்வாய்ந்த தலைமை சமையல் கலைஞர் ராஜா தான் இவ்விழாவில் சிறப்பாளராக பங்கேற்கிறார். இவரும், இவரின் குழுவினரும் கேரள மாநிலத்தின் தலைசிறந்த உணவுகளை தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளனர்.
இந்த உணவுத் திருவிழாவில் கோழி. மீன், செம்மீன் ஊருகாய் இஞ்சிபுளி, மலபார் நண்டு சாரு, பச்சை மாங்கா மிளகு பொடி இட்டது, மத்தி மீன் பிரை, வழுதலங்கா அரைச்ச கறி, மதுரம் கறி, தலச்சேரி கோழி பிரியாணி சக்க பிரதமன், இதைத் தவிர, அப்பம், மலபாரி பரோட்டா, மீன் பொல்லிச்சது பதிதிரி, பழம்பொரி ஆகியவை லைவ் கவுன்டர்களில் உடனடியாக தயாரித்து வழங்கப்படும்.
இதுமட்டுமின்றி உணவுத் திருவிழா நடைபெறும் திறந்தவெளியில் நீர்நிலைகளில் கேரள மாடல் படகுகள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்காரம் திருவிழாவிற்கு வருவோரை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், உணவுத் திருவிழாவில் உணவுகளை பரிமாறும் ஊழியர்களும் கேரளாவின் பாரம்பரிய உடைகளை அணிந்து இருப்பார்கள் என்றார்.இவ்விழா பிப்ரவரி 2 முதல் 6 தேதி வரை தினமும் இரவு 7.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை நடைபெறும். விழாவில் பங்கேற்க ஒரு நபருக்கு ரூ.799 கட்டணமாக பெறப்படும். மேலும், 8 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ரூ.500 கட்டணமாக பெறப்படும்.