February 2, 2018
தண்டோரா குழு
கோவையில் மின்வாரிய ஊழியர்களுக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி இன்று(பிப் 2) இன்று துவங்கியது.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் தேசிய அளவிலான மின்வாரிய ஊழியர்களுக்கான கூடைப்பந்து போட்டி இன்று துவங்கி உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 11 அணிகள் பங்குபெற்று உள்ளனர்.
லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுக்களாக நடைபெறவுள்ள இப்போட்டிகள் வருகிற நான்காம் தேதி வரை நடைபெறவுள்ளது.இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழக அணியும் , மகாராஷ்டிரா அணியும் விளையாடின. இந்த போட்டியில் 38 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழக அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இறுதிப் போட்டிகள் நான்காம் தேதி நடைப்பெறவுள்ளது .