• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை அணி சாதனை

May 12, 2019 தண்டோரா குழு

ஐபிஎல் கிரிக்கெட் இறுதி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி
கோப்பையை வென்றது.

12வது ஐபிஎல் இறுதி போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 149 ரன்களை குவித்தது.மும்பை அணி சார்பில்
அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார்.சென்னை சார்பில் தீபக் சாகர் 3 விக்கெட்களையும்,தாகூர், தாகிர் தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 148 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி சார்பில் டூ பிளஸிஸ் 13 பந்துகளில் 26 ரன்களையும், வாட்சன்80,ரொய்னா 8, அம்பதி ராயுடு 1, டோனி 2 ரங்களையும் எடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018–ம் ஆண்டுகளிலும்), மும்பை இந்தியன்ஸ் (2013, 2015, 2017–ம் ஆண்டுகளிலும்) அணிகள் தலா 3 முறை கோப்பையை வென்று இருக்கின்றன.தற்போது 4–வது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை அணி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க