• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

4 ஆட்டை மேய்த்தால் 3.75 லட்சம் வாடகைக்கு வீட்டில் இருக்க முடியுமா?-அமைச்சர் செந்தில்பாலாஜி

April 14, 2023 தண்டோரா குழு

கோவையில் இன்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அண்ணாமலை காட்டியதை மனசாட்சி படி இருக்கும் யாருமே இதை பில்லாக ஏற்று கொள்ளஎக்ஸ் மாட்டார்கள்.பில் என காகிதத்தை வெளியிட்டார. எக்ஸ் எல் சீட் தயாரிக்க 4 மாதம் ஆச்சா. அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை ரூ. 3.75 லட்சம்.மாத மாதம் யார்த் கொடுக்கின்றார். பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகின்றதா ?வார் ரூம் வசூல்தான் நண்பரா?அவரக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தது குறித்து அவர் குறிப்பிடும் நபர் வாட்ச் வாங்கினது ரூ.4.5 லட்சம். அதை 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக சொல்கிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது.வாட்ச் நம்பரை மாற்றி சொல்கின்றார். அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார்.

ஒரு வெகுமதியை, லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கின்றார் அண்ணாமலை.
பரிசு கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு என்ன தயக்கம் ?
4 ஆட்டை மேய்த்தால் 3.75 லட்சம் வாடகைக்கு வீட்டில் இருக்க முடியுமா?தூய்மையாக இருப்பவர் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழுகின்றார்.

கட்சி தேசிய கட்சியாக இருக்கலாம். தலைமை கோமாளியாக இருக்கின்றார். சாப்பாடு, பெட்ரோல்,மூளை எல்லலாமே ஓசியாக இருக்கின்றது.என்னைபற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கின்றார்.முதல்வர் அனுமதி பெற்று நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கை தாக்கல் செய்ய இருக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க