• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“370 சட்டப்பிரிவு ரத்தானது ஜனநாயகப் படுகொலை!” – மு.க.ஸ்டாலின்

August 5, 2019 தண்டோரா குழு

ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதலை பெறாமல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி விட்டனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35A-வை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உட்பட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்தாலோசிக்காமல், 370 வது பிரிவு பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக படுகொலைக்கு அதிமுக துணை போயிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்த ஜனநாயக படுகொலைக்கு அதிமுக துணை போயிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வரும் வரை குடியரசுத் தலைவர் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் படிக்க