• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

36 வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்

February 9, 2022 தண்டோரா குழு

36 வது வார்டு பகுதியில் உள்ள அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன் என பா.ஜ.க.சார்பாக 36 வது வார்டில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ஜெயந்தி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க.தனியாக தேர்தலை சந்தித்து,கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பா.ஜ.க.வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் கோவை மாநகராட்சி 36 வது வார்டில் பா.ஜ.க.வேட்பாளராக தாமரை சின்னத்தில் ஜெயந்தி வேணுகோபால் போட்டியிடுகிறார். 36 வது வார்டு பகுதி மக்களிடையே. பகவான் ஸ்டீல்ஸ் ஜெயந்தி வேணுகோபால் என நன்கு அறிமுகமான இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகளால் அடிப்படை தேவைகள் சரியான முறையில் வார்டுகளில் நிறைவேற்றப்படவில்லை எனவும், குறிப்பாக கடந்த ஆறு வருடங்களாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் வார்டுகளில் சுகாதார சீர்கேடு,குடிநீர் பற் றாக்குறை என பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், தாம் வெற்றி பெற்றால் இவை அனைத்திற்கும் தீர்வு காண்பேன் என உறுதியளித்தார்.

வீடு வீடாக பிரச்சாரம் பிரச்சாரம் செய்து வரும் இவர்,மத்திய அரசின் திட்டங்களை வார்டு பகுதி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க