• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

30 நிமிடங்களில் பரிசோதனை;1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன – முதல்வர் பழனிசாமி

April 6, 2020 தண்டோரா குழு

இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை தலைமை செயலகத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஏற்கனவே நடைபெற்ற போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.அதனடிப்படையில் அவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.உலகையே உலுக்கி கொண்டிருக்கிற கொரோனா வேகமாக பரவி வருகிறது.இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் பணி முழு மூச்சாக நடைபெற்று வருகிறது. மருத்துவ வசதிகள் அரசிடம் உள்ளது. மேலும் தேவையான உபகரணங்கள், உள்ளிட்டவை போதிய அளவு கையிருப்பு உள்ளது.

சுமார் 90ஆயிரம் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு கண்காணிப்பில் இருந்தனர். சுமார் 10 ஆயிரம் பேர் கண்காணிப்பு காலம் நிறைவடைந்தவர்களாக உள்ளனர். தமிழகத்தில் 38 கொரோனா ஆய்வகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும். இன்று வரை 571 பேர் கொரோனா தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 2800 வெண்டிலேட்டர்கள் வாங்க கொள்முதல் ஆணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.4612 பேருக்கு தமிழகத்தில் கொரோனா ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் சிகிச்சைக்கு தயாராக உள்ளன .

துரித பரிசோதனைக்காக ராப்பிட் டெஸ்ட் செய்ய 1 லட்சம் அளவிற்கு வாங்குவதற்கு கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவை கிடைத்த உடன் துரித பரிசோதனை செய்ய ஏதுவாக இருக்கும். தமிழகத்திற்கு வரும் 9ந் தேதி ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் வந்துவிடும் – 10ந் தேதி முதல் ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் மூலம் சோதனை நடைபெறும்.144 உத்தரவை மீறியதாக சுமார் 94ஆயிரம் பேர் மீது வழக்கு, கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 144 தடை உத்தரவை மீறியதற்காக சுமார் 72ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு முதற்கட்டமாக 500 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அனைத்துவித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க