November 29, 2021
தண்டோரா குழு
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகளின் ஒரு வருட கால கடும் போராட்டத்தின் விளைவாக சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,இன்று குளிர்கால கூட்டம் தொடங்கியது.இதில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில்எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மசோதாவை தாக்கல் செய்தார்.
இதனைதொடர்ந்து, எந்தவிதமான விவாதமும் இன்றி 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.