• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

3 கால்களுடன் பிறந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை

May 3, 2017 தண்டோரா குழு

வங்கதேசத்தில் மூன்று கால்களுடன் பிறந்த சிறுமிக்கு ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வங்கதேசத்தை சேர்ந்த சோய்டி கதூன் என்னும் 3 வயது சிறுமி மூன்று கால்களுடன் பிறந்தாள்.தற்போது அந்தச்சிறுமிக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மூலம், மூன்றாவது காலை மருத்துவர்கள் வெற்றிகரமாக எடுத்துள்ளனர்.

மோனாஷ் சிறுவர்கள் மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர், கிரிஸ் கிம்பர் கூறுகையில்,

“சோய்டி ஆஸ்திரேலியாவிற்கு வந்தபோது, ஊட்ட சத்து குறைப்பாடு இருந்தது. அவளாள் சரியாக நடக்கக் கூடி முடியவில்லை. மூன்றாவது காலின் ஒரு பகுதியை வங்கதேச மருத்துவர்கள் ஏற்கனவே எடுத்துவிட்டனர். மற்ற பாகத்தை எடுப்பது குறித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே, மிகுந்த கவனத்தோடு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவளுடைய கண்பார்வையின் ஒரு பகுதியை இழந்து விட்டாள். அதை சரி செய்ய முடியாது என்று அவளை பரிசோதித்த கண் மருத்துவர் தெரிவித்துளார்” என்றார்.

சிறுமியின் உடலிலிருந்து மூன்றாம் கால் எஞ்சிய பகுதியை எடுத்த மருத்துவ குழுவினர், அவள் வீடு திரும்பிய பிறகு அவளுடைய உறுப்புக்கள் இயல்பாக இயங்குவதை உறுதி செய்யும் விதமாக மறுகட்டமைப்பு சிகிச்சையை மேற்கொண்டனர்.

அவளுடைய தாய் கூறுகையில்,

“இப்போது அனைத்தும் நன்றாக இருக்கிறது. என் மகளால் மற்ற குழந்தைகளை போல் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

மேலும் படிக்க