December 21, 2017
தண்டோரா குழு
2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நாடே எதிர்பார்த்து காத்திருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றச்சாட்டுகளை சிபிஐ நிரூபிக்க தவறியதால் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 11 பேரையும் விடுதலை செய்து நீதிபதி சைனி அதிரடி தீர்ப்பளித்தார்.
இதையெடுத்து, திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யவேண்டும் என கூறியுள்ளார்.