• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

29 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பதே எங்கள் இலக்கு – அமித்ஷா

December 18, 2017 தண்டோரா குழு

29 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பதே எங்கள் இலக்கு என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

குஜராத், இமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் மீண்டும் குஜராத்தில் ஆட்சியை தக்கவைத்த பாஜக,இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.இந்நிலையில்,டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

வெற்றியை பெற்றுத்தந்த குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மக்களுக்கு நன்றி.சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கே வெற்றி என்பது நிரூபணமாகியுள்ளது. குஜராத்தில் எங்கள் வாக்கு சதவிகிதத்தில் பின்னடைவு ஏற்படவில்லை.

1990ல் இருந்து குஜராத்தில் பாஜக வெற்றியை மட்டுமே சந்தித்துள்ளது.பாஜக,காங் இடையே 8 சதவீதம் வாக்கு வித்தியாசம் உள்ளது.தோற்ற இடங்களில் அதற்கான காரணங்களை ஆய்வு செய்வோம். ஹிமாச்சலில் கடந்த தேர்தலைவிட 10% வாக்குகளை கூடுதலாக பாஜக பெற்றுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சியமைந்த பிறகு, அனைத்து தேர்தல்களிலும் அதிக வெற்றி பெற்றுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தான் வெற்றி பெறும்.தேர்தல் அறிக்கையில் காங் கட்சியின் வாக்குறுதிகள் சாத்தியமற்றது. காங்கிரசின் சாதியவாத அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 29 மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பதே எங்கள் இலக்கு என அமித்ஷா கூறியுள்ளார்.

மேலும் படிக்க