• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சூழல் பாதுகாப்பு, உடல்நலம் – மணமகன்களின் சைக்கிள் ஊர்வலம்

November 5, 2016 தண்டோரா குழு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உடல்நலம், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குஜராத்தில் நூதனமான மணமகன் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இந்த விழிப்புணர்வுக்காக 258 மணமகன்கள் சைக்கிளில் திருமண ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர்.இதற்கு பல தரப்பட்டவர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ‘சவுராஷ்டிரா படேல் சேவா சமாஜ்’ என்ற சமூக அமைப்பு இந்த வித்தியாசமான திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அந்த அமைப்பின் சார்பில் 58-வது மெகா திருமண நிகழ்ச்சி வரும் திங்கள் (நவம்பர் 7) இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி இவ்வாறு புதுமையான மணமகன் வரவேற்பு நடைபெறுகிறது.

குஜராத் சமூகத்தினர் மணமகன்கள் திருமணத்தின் போது, குதிரையில் வருவது மரபு. சிலர் கார்களிலும் அழைத்துச் செல்லப்படுவர். அவர்களது குடும்பத்தினர் நடந்தே திருமண நிகழ்ச்சிக்கு வருவர். “ஆனால், இம்முறை புதுமையான முறையில் மணமகன்களை சைக்கிளில் ஊர்வலமாக அழைத்து வரப்போகிறோம்” என்று சேவா சமாஜ் அமைப்பினர் கூறுகின்றனர்.

இது குறித்து, சவுராஷ்டிரா படேல் சேவா சமாஜத்தின் தலைவர் கன்ஜி பலாலா கூறியதாவது:

“மணமகன்களின் சைக்கிள் ஊர்வலம் வரும் 7-ம் தேதி காலை 8.30 மணிக்கு வராச்சா பகுதியில் உள்ள சவுராஷ்டிரா பவனில் தொடங்கி லோக் சமர்ப்பண் ரக்தாதன் கேந்திரா என்ற இடத்தை அடையும்.

“இந்த ஊர்வலத்தில் எல்லோரும் பங்கேற்கவேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். நாட்டின் 20 பொலிவுறு நகரங்களில் முதன்மையாக சூரத் நகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, உடல்நலம், போக்குவரத்து நெரிசல், மாசுப்பாடு போன்றவை குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் மணமகன்கள் சைக்கிள் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்துள்ளோம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க சைக்கிளின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் இந்த ஊர்வலம் நடக்கிறது’’ இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க