• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பஞ்சாப் திருமணத்தில் இளைஞர் சுட்டு நடன மங்கை மரணம்

December 5, 2016 தண்டோரா குழு

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா என்னும் இடத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 3) நடந்த ஒரு பிரமுகரின் திருமணத்தின்போது 25 வயது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

குல்விந்தர் என்ற அந்தப் பெண் நான்கு பேர் கொண்ட நடனக் குழுவைச் சேர்ந்தவர். அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா நகரில் உள்ள மூர் மண்டி என்னும் இடத்தில் நடந்த ஒரு திருமணத்தில் நடனமாட வந்துள்ளார். அந்நிகழ்ச்சியைக் காணவந்த ஓர் இளைஞர் திடீரென்று குல்விந்தரை நோக்கித் துப்பாகியால் சுட்டார். பலத்த காயமடைந்த குல்விந்தர் அந்த இடத்திலேயே சரிந்தார். உடனே, அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் மருத்துவமனையில்சேர்க்கப்படும் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

அந்தத் திருமணத்தில் குல்விந்தர் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது, மணமகனின் நண்பர்களை, அவரை அவளை மேடையில் இருந்து கீழே இறங்கி அவர்களுடன் நடனம் ஆட வற்புறுத்தினர். அதற்கு குல்விந்தர் மறுத்துவிட்டார். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தனர். அவர்களில் ஒருவனான பில்லா என்பவர் குல்விந்தரிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், அதை குல்விந்தர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரம் அடைந்ததாகக் கூறப்படும் பில்லா தான் வைத்திருந்த துப்பாக்கியால் குல்விந்தரை நோக்கிச் சுட்டார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார் என்று குல்விந்தரின் கணவர் ஹர்ஜிந்தர் சிங்க் தெரிவித்தார்.

இச்சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், கொலையாளி அங்கு இருந்து தப்பிச் சென்றுவிட்டார். பில்லா மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உண்மை தெரியவரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க