• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

24 மணிநேரமும் வார்டில் எந்த பிரச்சனை என்றாலும் எங்கள் தொண்டர்கள் வருவார்கள் -டாக்டர் ஆர் மகேந்திரன்

March 19, 2021 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் டாக்டர் ஆர் மகேந்திரன்இன்று சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை சிங்காநல்லூர் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் டாக்டர் ஆர் மகேந்திரன் இன்று 59 மற்றும் 60வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி ஒண்டிப்புதூர் சுங்கம், மதுர வீரன் கோவில் வீதி,எழில் நகர், மாரியம்மன் கோவில், நஞ்சப்ப செட்டியார் வீதி ஆறுமுக கவுண்டர் வீதி, நேரு நகர் குடியிருப்பு, ஆஞ்சநேயர் காலணி, திருவள்ளுவர் நகர், எஸ்.எம்.எஸ்.லே அவுட், புது செட்டியார் வீதி, எஸ்.ஐ.எச்.எஸ் காலணி ரோடு, ரேணுகா நகர், கணபதி நகர், பழனியப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் தன் கட்சி சின்னமான டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

*வேட்பாளரை வீட்டிற்கு அழைத்து சென்ற பள்ளி மாணவி;*

பிரச்சாரத்தின் போது மகேந்திரன் மதுரவீரன் கோவில் வீதியில் பள்ளி மாணவி ஒருவர் வந்து எங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்று அவரை தன் அழைத்து சென்று தன் பெற்றோரிடம் டார்ச் லைட் சினத்தித்திற்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார்.

அப்போது அப்பகுதி மக்கள் யாரும் எங்க தெருவுக்கு வரவில்லை சார் நீங்க தான் வந்துருக்கிறீங்க. கண்டுக்க உங்களுக்கு தான் என்று மகேந்திரனுக்கு நம்பிக்கை அளித்தனர்.

இதையடுத்து, வாக்காளர்கள் மத்தியில் மகேந்திரன் பேசுகையில்,

மாறி மாறி இரண்டு திராவிட கட்சிக்கும் வாக்களித்தீர்கள்.ஆனால் இதுவரை இந்த பகுதியில் என்ற மாற்றமும் நடைபெறவில்லை. காலணிக்குள் கால்வாய் வசதி கூட இன்னும் இல்லை. எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் உங்கள் பகுதிக்கு நிறைய அடிப்படை வசதிகள் செய்து தருவேன்நான் பெற்றி பெற்றால் மாதம் தோறும் ஒவ்வொரு வார்டுக்கும் நிச்சயம் வருவேன்.உங்கள் குறைகளை கேட்டறிந்து அதை சரிசெய்வேன்.கையெழுத்து போட்டுக்கொடுக்க நான் தயார். 24 மணிநேரமும் வார்டில் எந்த பிரச்சனை என்றாலும் எங்கள் தொண்டர்கள் வருவார்கள். சரித்திரத்தில் இப்படி வெற்றி இல்லை என்ற அளவிற்கு எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் டாக்டர் மகேந்திரனுக்கு வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்களை விநியோகித்து சென்றனர்.

மேலும் படிக்க