• Download mobile app
14 Dec 2025, SundayEdition - 3595
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2026ல் கோவையிலிருந்து 300 மாணவர்களை மத்திய அரசு பணியாளர்களாக நிலைநிறுத்தும் நோக்குடன் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்திய ‘டிரினிட்டி கான்கிளேவ்’

December 14, 2025 தண்டோரா குழு

அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் மத்திய அரசின் வங்கி, ரயில்வே துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளைத் துணிவுடன் அணுகி வெற்றி பெற வழிகாட்டும் நோக்கில்,சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் கிராஸ் கட் ரோடு கிளையில் இன்று சிறப்பு மாநாடு ஒன்று நடைபெற்றது.

‘டிரினிட்டி கான்கிளேவ்’ என்னும் indha நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
கனரா வங்கியின் மூத்த மேலாளர் சூர்யா பசவராஜு; சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் மூத்த மேலாளர் கார்த்திக்; மூத்த அஞ்சல் துறை அதிகாரி காசி விஸ்வநாதன் மற்றும் மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி ஆய்வாளர் தினகர் ஆகியோர் இந்நிகழ்வின் பிற சிறப்புரையாளர்களாகக் கலந்து கொண்டனர். அகாடமியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

மாணவர்களிடையே உரையாற்றிய கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மத்திய அரசில் வேலைவாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாகக் கூறினார். சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், மத்திய அரசுப் பணிகளுக்கும் முயற்சிக்க வேண்டும் என்றும், தங்கள் முயற்சியில் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பெரும்பாலான மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வலுவாக உள்ள நிலையில், அவர்கள் ஹிந்தி மற்றும் ஒரு அயல்நாட்டு மொழி என மேலும் இரண்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார். நான்கு மொழிகளைத் தெரிந்திருப்பது நிச்சயம் அவர்களது தகுதிக்கு வலு சேர்க்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் பேசிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் மற்றும் வங்கிப் பிரிவுத் தேர்வுகள் துறை தலைவர் சிபி கூறுகையில், “இந்த ‘டிரினிட்டி கான்கிளேவ்’ அகாடமியின் ‘மிஷன் 300’ திட்டத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டார்.

அதாவது கோயம்புத்தூரில் இருந்து 300 மாணவர்களைத் தயார்படுத்தி, 2026-ஆம் ஆண்டில் அவர்களை மத்திய அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறச் செய்வதே ‘மிஷன் 300’ திட்டத்தின் நோக்கம். இந்நிகழ்வு அதை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஒரு படி,” என்றார்.

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் கிளைத் தலைவர் அருண் கூறுகையில்,

“தமிழக மாணவர்கள் பெரும்பாலும் டி.என்.பி.எஸ்.சி (TNPSC) தேர்வுகளையே குறிவைக்கின்றனர். ஆண்டுதோறும் SSC, RRB மற்றும் வங்கித் துறைகளில் சுமார் ஒரு லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.

வேலை சூழலில் மொழிப் பிரச்சினை இருக்குமோ அல்லது சொந்த மாநிலத்தில் பணி ஒதுக்கீடு கிடைக்குமோ என்ற பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளே மாணவர்கள் மத்திய அரசுப் பணிகளை நாடாததற்குக் முக்கியக் காரணங்களாக உள்ளன.இந்த ‘டிரினிட்டி கான்கிளேவ்’ மூலம் மாணவர்களின் சந்தேகங்களைப் போக்கித் தெளிவு வழங்கவும், இத்துறையில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி எடுத்துரைக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.

கோயம்புத்தூரில் இருந்து 300 மாணவர்களை ஊக்கப்படுத்தி, வழிகாட்டி, மத்திய அரசுப் பணிகளில் சேர வைப்பதே எங்களது குறிக்கோள்,” என்று கூறினார்.

மேலும் படிக்க