• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் – கோவை செல்வராஜ்

November 16, 2019

2021 சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தொடர்வார் எனவும், திமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்து ஆடுவதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பேட்டிளித்துள்ளார்.

கோவையில் பத்திரிகையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அதிமுக 2021 ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து முதலமைச்சராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் மகத்தான வெற்றியும் பெறுவோம். நாங்குநேரி, விக்கிரவாண்டி தேர்தலின் தோல்வியில் இருந்து முக ஸ்டாலின் இன்னும் மீளவில்லை, தமிழகத்தில் தற்போது அரசியல் வெற்றிடம் இல்லை. சினிமா துறையில் தான் வெற்றிடம் உள்ளது.

எம் ஜி ஆர், சிவாஜிக்கு பிறகு தமிழக சினிமா துறையில் தொடர்ந்து வெற்றிடம் உள்ளது. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆட்சியே தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழக அரசால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த கட்ட நகர்வு நீதிமன்றத்தின் கையில் உள்ளது..

அதிமுக வின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் தொண்டர்கள் சம்மதத்தோடு எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக தேர்தலை சந்திக்க உள்ளோம். அதிமுக தற்போது தெளிவான தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிமுக விற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி, விக்ரவாண்டி இடைத்தேர்தல் தோல்வியில் இருந்து இன்னுன் மீளவில்லை, உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஸ்டாலின் அச்சம். கொள்கிறார். திமுக விற்குள் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. அதனால் இந்த தேர்தலை தள்ளிப்போட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்.

மேலும் படிக்க