• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2021ம் ஆண்டுக்கான எல்கேஜி சேர்க்கை துவங்கியது

March 25, 2017 தண்டோரா குழு

சென்னையிலுள்ள ஒரு பள்ளியில் 2௦21ம் ஆண்டிற்கான மாணவ சேர்க்கைக்கு இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளுக்கு முன் பதிவு செய்துக்கொள்ளலாம் என்னும் அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள அடையாறில் சிஷ்யா என்னும் பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியின் அதிகாரபூர்வமான இணையதளத்தில், “2௦2௦ம் ஆண்டிற்கான எல்.கே.ஜி வகுப்பிற்கான குழந்தைகள் சேர்ப்பு முடிந்துவிட்டது.

2௦21ம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளை பதிவு செய்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தது.மேலும், அந்த பள்ளியில் படிக்கும் சகோதர, சகோதரிகள் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு முன்னுரிமை தரப்படும்” என்றும் தெரிவித்துள்ளது.

அப்பள்ளியின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதன் அதிகாரபூர்வமான வலைத்தளம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க