• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2020 ஆம் ஆண்டில் மூலிகை ஊட்டச்சத்து பிரிவில் 100 கோடி ரூபாயை எதிர்நோக்குகிறது ஆம்வே

December 8, 2020

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நுகர்வோர் மாறி வருவதால் மூலிகை ஊட்டச்சத்து வகைக்கான தேவை கடுமையாக உயர்ந்து வருவதன் காரணமாக, நாட்டின் முன்னணி எஃப்எம்சிஜி நேரடி விற்பனை நிறுவனங்களில் ஒன்றான ஆம்வே இந்தியா, அதன் பாரம்பரிய மூலிகை ஊட்டச்சத்து வகையின் விற்பனை இந்த ஆண்டு 100 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்நோக்குகிறது.

மூலிகை தயாரிப்புகளுக்கான அதிகரித்துவரும் தேவைக்கு ஏற்ப, இந்தியாவில் அதன் உள்ளூர் மூலிகை சாறு ஆதாரங்களை வலுப்படுத்தவும் ஆம்வே தயாராகி வருகிறது. இந்தியாவிலும், நியூட்ரிலைட் குறிப்பிடத்தக்க பிராண்ட் ஈக்விட்டி கொண்டுள்ளது. முழுமையான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் போக்கின் அடிப்படையில், 50% முதல் 65% வரையிலான தற்போதைய பங்களிப்புடன் ஊட்டச்சத்து வகை 2024 ஆம் ஆண்டில் வேகமாக வளரும் என்று நிறுவனம் எதிர்நோக்குகிறது. இதில் மூலிகை ஊட்டச்சத்து பிரிவில் இருந்து கிடைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பும் அடங்கும்.

இது பற்றி கருத்து தெரிவிக்கும் ஆம்வே இந்தியா சிஇஓ, அன்ஷு புத்ராஜா,

“முழுமையான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய தீர்வை நோக்கிய ஒரு சார்பு அதிகரித்து வருகிறது. இது நமது பாரம்பரிய நம்பிக்கைகளை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது. ‘மீண்டும் உள்ளூர்’ என்ற போக்கு துளசி, இஞ்சி, மஞ்சள், நெல்லி போன்ற பொருட்களின் நுகர்வை துரிதப்படுத்தியுள்ளது. மூலிகைக்கான நுகர்வோரின் முன்னுரிமை அதிகரித்து வருவதால், 2018 ஆம் ஆண்டில் நியூட்ரிலைட் பாரம்பரிய மூலிகைகள் வரம்பை கொண்டு ஆம்வே பாரம்பரிய மூலிகை ஊட்டச்சத்து துறைக்குள் நுழைந்தது. இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது, துளசி, அஸ்வகந்தா, அதிமதுரம் மற்றும் பலவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட வெறும் ஆறு தயாரிப்புகளை உள்ளடக்கிய இந்த வரம்பு இந்த ஆண்டு 100 கோடி ரூபாய் விற்பனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு சமீபத்திய அறிக்கை, கடந்த சில மாதங்களில், இந்தியாவில் 51% க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பாரம்பரிய பொருட்களை தங்கள் உணவின் ஒரு பகுதியாக ஆக்கியுள்ளன என்று குறிப்பிடுகிறது. இது வரும் ஆண்டுகளில் இந்த வகைக்கு இருக்கும் பெரும் சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டுகிறது. சந்தை சூழ்நிலையை பொறுத்தவரை, ஒட்டுமொத்த ஊட்டச்சத்து வகைக்கு பாரம்பரிய மூலிகைகளின் பங்களிப்பு இன்று 10% இல் இருந்து 2024 ஆம் ஆண்டில் 20% ஆக இரு மடங்கு அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று கூறினார்,

மேலும் படிக்க