• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2019ம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு தொடக்கம்

November 1, 2018 தண்டோரா குழு

2019ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.

2019ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே 5ம் தேதி நடைபெறவுள்ளது.நீட் தேர்வை இதுவரை சி.பி.எஸ்.இ நடத்தி வந்த நிலையில்,இனிவரும் காலங்களில் NTA எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தவுள்ளது.இந்நிலையில்,2019ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.பிளஸ் டூ படிக்கும் அல்லது படித்து முடித்த மாணவர்கள் இன்று முதல் தேசிய தேர்வு முகமையின் www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நவம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.வழக்கம்போல் 10-க்கும் மேற்பட்ட மாநில மொழிகளிலும் வினாத்தாள் வழங்கப்படவுள்ளது.தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜூன் 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க