October 8, 2018
தண்டோரா குழு
2018ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக,பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாம் நகரில் 2018ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.ஏற்கனவே மருத்துவம்,இயற்பியல்,வேதியியல்,அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில்,2018ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ்,பால் ரோமர் ஆகிய 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்விற்காக இவர்களுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.2018ம் ஆண்டுக்கான அனைத்து நோபல் பரிசு குறித்த அறிவுப்புகளும் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.