• Download mobile app
10 Dec 2018, MondayEdition - 1034
FLASH NEWS
  • மெரினா கடற்கரை பராமரிப்பு குறித்து மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
  • எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
  • மெரினாவை சுத்தப்படுத்துவது குறித்து டிசம்பர் 17க்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கெடு

2018 ல் அதிகம் சம்பாதித்த 100 இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ் இதழ்

December 5, 2018 தண்டோரா குழு

ஒவ்வொரு ஆண்டும் அதிகம் வருமானம் பெற்ற 100 இந்திய நட்சத்திரங்களை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகிறது நியூயார்க்கை சேர்ந்த பிரபல ஃபோர்ப்ஸ் இதழ். அந்த வகையில் இந்தியாவில் 2018-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த டாப்-100 பிரபலங்களின் பட்டியலை Forbes இதழ் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 01, 2017 முதல் செப்டம்பர் 30, 2018 வரையிலான காலகட்டத்தில் இவர்கள் பெற்றுள்ள வருமானத்தை கொண்டு இப்பட்டியல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டில் ரூ. 253.25 கோடி வருவாய் பெற்று ஒட்டுமொத்த பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடம் பெற்றுள்ளார். இந்த ஆண்டு மட்டும் 228 கோடி ரூபாய் சம்பாதித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார். சென்ற ஆண்டு இவர் 3ம் இடம் பிடித்திருந்தார். 185 கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ள மற்றொரு பாலிவுட் நடிகர் அக்‌ஷக் குமார் 3வது இடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இரண்டாம் இடம் வகித்த ஷாருக், இந்த ஆண்டு டாப்-10 பட்டியலில் இடம்பிடிக்க முடியாமல் போயுள்ளார். 56 கோடி வருமானமாக ஈட்டியுள்ள ஷாருக்கால் 13ம் இடமே பிடிக்க முடிந்துள்ளது.

இதுவரை இப்பட்டியலின் டாப்-5க்குள் எந்த ஒரு பெண் நட்சத்திரமும் இடம்பிடித்ததில்லை என்ற நிலையில் முதல் முறையாக தீபிகா படுகோன் இப்பட்டியலில் 4வது இடம் பிடித்து அசத்தியுள்ளார். 112.8 கோடி ரூபாயை அவர் வருமானமாக ஈட்டியுள்ளார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, (ரூ. 101.77 கோடி) 5ம் இடமும், அமீர் கான் (ரூ.97.50 கோடி) 6ம் இடமும், அமிதாப்பச்சன் (ரூ.96.17 கோடி) 7ம் இடமும், தீபிகா படுகோனின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் (ரூ. 84.7 கோடி) 8ம் இடமும், சச்சின் டெண்டுல்கர் (ரூ. 80 கோடி) 9வது இடமும், அஜய் தேவ்கன் (ரூ.74.50 கோடி) 10ம் இடமும் பெற்றுள்ளனர்.

11- ஏ.ஆர்.ரஹ்மான் (66 கோடி)
14- ரஜினிகாந்த் (50 கோடி)
24- பவன் கல்யாண் (31 கோடி)
26- விஜய் (30 கோடி)
29- விக்ரம் (26 கோடி)
34- சூர்யா, விஜய் சேதுபதி (23.6 கோடி)
53- தனுஷ் (17.25 கோடி)
69- நயன்தாரா (15.17 கோடி)
71- கமலஹாசன் (14.2 கோடி)

100 நபர்கள் அடங்கிய இப்பட்டியலில் நடிகைகள் தீபிகா படுகோன், ஆலியா பட், அனுஷ்கா சர்மா, கத்ரினா கைஃப், பேட்மிண்டன் வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால் உள்ளிட்ட 18 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் 17 பேர் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். கோலமாவு கோகிலா, அறம் ஆகிய வெற்றிப் படங்களில் நடித்த நடிகை நயன்தாரா இப்பட்டியலில் இடம்பெற்ற ஒரே தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் இவருடைய வருமானம் இந்த ஆண்டில் மட்டும் 15.17 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க