October 3, 2018
தண்டோரா குழு
2018ம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாம் நகரில் 2018 ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு ஒரு பெண் உட்பட 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரான்சிஸ் ஹெச். அர்னால்ட், ஜார்ஜ் பி.ஸ்மித், பிரிட்டனை சேர்ந்த கிரிகோரி பி.விண்டர் ஆகியோருக்கு, மனித குலத்திற்கு உதவும் வகையில், புதிய வேதியியல் பொருட்களை கண்டுபிடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.