October 5, 2018
தண்டோரா குழு
2018ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹாம் நகரில் 2018 ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவம்,இயற்பியல் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டை சேர்ந்த டெனிஸ் முக்வேஜாவுக்கும், ஈராக்கின் குர்தீஷ் இனத்தை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போர் மற்றும் உள்நாட்டு போரின் போது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடியதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஆள் கடத்தலுக்கு எதிராக போராடிய நாடியா முராத், ஐ.நா., சார்பில் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.