November 17, 2017
தண்டோரா குழு
2017 ஜனவரி முதல் அக்டோபர் வரை 14,077 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
2017 ஜனவரி முதல் அக்டோபர் வரை 14,077 பேர் சாலை விபத்தில் பலியாகி உள்ளனர் என்றும் கடந்த அக்டோபர் வரை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டியதாக 86,873 பேர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர்கள் என 4,730 பேர் பலியாகி உள்ளனர் என்றும் விபத்துக்களை குறைக்கவும், உயிரிழப்புகளை குறைக்கவும் சாலை விதிகளை மதிக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக அறிக்கையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.