• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2014ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை – எல்.முருகன் பேட்டி !

August 16, 2021 தண்டோரா குழு

பாஜக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கோவையில் மக்கள் ஆசிர்வாத யாத்திரியை மத்திய இணை அமைச்சர் முருகன் இன்று துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அருந்ததியர் சமூதாயத்தில் பிறந்த என்னை பிரதமர் நரேந்திரமோடி இணை அமைச்சராக பதவியேற்று அழகு பார்த்துள்ளார். செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த என்னை மாநில தலைவராக்கியது பா.ஜ.க., தமிழகத்தில் எந்த கட்சியும் இதனை செய்ததில்லை. நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் இந்த சமுதாயம். ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவரை அறிமுகம் செய்ய வேண்டும். ஆனால் என்னை அறிமுகம் செய்யக்கூடாது என்று கங்கனம் கட்டிக்கொண்டது. காங்கிர்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதனைத்தடுக்க முயன்றனர்.

அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தையும், ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டும் திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது மத்திய அரசு.8 கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை. வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. ஆயுஷ்மான் பாரதம் மூலம் 5 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு திட்டம் கொடுத்துள்ளனர்.

சமூக நீதியை போற்றுகிறவராக பிரதமர் இருக்கிறார்.இந்த மத்திய அமைச்சரவையில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 அமைச்சர்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்த 8 அமைச்சர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 28 அமைச்சர்கள் உள்ளனர்.
நலத்திட்டங்களை செய்துள்ளதால் மக்களிடம் ஆசியை பெறுவதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

இவ்வாறு பேசினார்.

மேலும் படிக்க