• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வடகொரியாவில் அணு ஆயுத சோதனை சுரங்கம் உடைந்து 200 பேர் பலி

November 1, 2017 தண்டோரா குழு

கடந்த செப்டம்பா் மாதம்,வட கொரியாவில் அணு ஆயுதச்சோதனை நடந்த இடத்தில், நிகழ்ந்த சுரங்கபாதை விபத்தில் சுமார் 200 போ் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட கொரியா நாடு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்த சோதனைக்கு பல நாடுகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர். இருப்பினும், எதற்கும் அஞ்சாமல் அந்த நாடு தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வந்தது. இது குறித்து ஐநாவில் புகார் அளிக்கப்பட்டது. ஐநாவின் பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணை சோதனை குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்தது. இருப்பினும், வட கொரியா தொடர்ந்து தனது ஏவுகணை சோதனையை நடத்தி வந்தது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், 10ம் தேதி, வடகிழக்கு கொரியாவில் உள்ள புங்கைசி பகுதியில் புதிய நிலத்தடி அணுகுண்டு சோதனை மையம் கட்டும்போது, ஏற்பட்ட விபத்தில் சுமார் 1௦௦ பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு நடைபெற்ற மீட்பு பணிகளின்போது மீண்டும் ஏற்பட்ட விபத்தில் மேலும் 100 போ் என மொத்தம் 200 போ் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடத்த செப்டம்பர் மாதம், 6 வது அணுசக்தி சோதனை நடத்தப்பட்ட பிறகு, அந்த பகுதிகளில் நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்ச்சியாக ஏற்படுகிறது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க