• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

20 மாநகராட்சி பள்ளிகளில் ‘அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணிதம்’ துவக்கம் !

July 26, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி பகுதியிலுள்ள 12 மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகள்,8 உயர்நிலைப்பள்ளி என மொத்த 20 மாநகராட்சி பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் வானவில் மன்ற திட்டத்தின் கீழ் ‘அறிவியல் தொழில்நுட்ப பொறியியல் கணிதம்’ திட்டத்தை தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.

மேலும் மேற்படிப்பு வழிகாட்டுதல், ஆலோசனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.இத்திட்டத்தின்கீழ் 5000 மாணவர்கள், 300 ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாநகராட்சி பள்ளிகளுக்கும் அறிவியல் உபகரணங்களை மாநகராட்சி கமிஷனர் மூலம் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலர் மரியசெல்வம்,பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க