• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2 கோடியே 85 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் – எஸ்.பி.வேலுமணி

January 6, 2020

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கினார் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை பூ மார்க்கெட் பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கியதாக தெரிவித்தார். இத்திட்டத்தை நீதிமன்றத்திற்கு சென்று தடுக்க முயன்றதாகவும், அதனை முறியடித்து இரண்டாவது ஆண்டாக செயல்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எளிமையான கிராமத்தில் இருந்து வந்த முதலமைச்சரை, யார் வேண்டுமானாலும் எளிதாக சந்திக்க முடியுமென அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் 2 கோடியே 85 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், கோவை மாவட்டத்தில் பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க 111 கோடியே 35 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க