• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2வது முறையாக தேசிய விருதை வென்ற தனுஷ்!

March 22, 2021 தண்டோரா குழு

டெல்லியில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மையத்தில் 67வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

திரைத்துறைக்கான சிறந்த மாநில விருது சிக்கிம்முக்கு வழங்கப்படுகிறது.பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்த செருப்பு படத்தின் ஒலிப்பதிவுக்காக ரசூல் பூக்குட்டி க்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அசுரன் திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது அசுரன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்கு தனுஷ் தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக விஜய சேதுபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது விஸ்வாசம் படத்துக்காக இசையமைப்பாளர் இமான் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது
மணிகர்னிகா படத்திற்காக, கங்கனா ரணாவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க