• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை – டிடிவி தினகரன்

October 31, 2018 தண்டோரா குழு

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்கிற முடிவில் மாற்றம் இல்லை என்று அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதையடுத்து அந்த 18 பேரிடமும்,டி.டி.வி. தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அப்போது தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா? அல்லது இடைத்தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து அனைவரிடமும் தினகரன் கேட்டார்.இந்த ஆலோசனையின் முடிவில்,தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்,மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,

“18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.மேலும் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடந்தால் அமமுக வெற்றி பெறும்.அப்போது, டிடிவி தினகரன் ஒரு மண் குதிரை என்றும்,அவரை நம்பி ஆற்றில் இறங்கியவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு‘மண் குதிரை யார் என்பதை,எங்கு தேர்தல் நடந்தாலும் மக்கள் நிரூபிப்பார்கள்’ என்றார்.

மேலும் படிக்க