January 20, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சி வெள்ளருக்கம்பாளையத்தில் 18 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் 6 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.90 ஆயிரம் மதிப்பிலான சுழல் நிதியினை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தேவராயபுரம் ஊராட்சியில் ரூ.38.80 லட்சம் மதிப்பில் பரமேஸ்வரன்பாளையம் முதல் குப்பேபாளையம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி, ரூ.44 லட்சம் மதிப்பில் சிறுவாணி சர்வீஸ் சாலை முதல் சின்னசாமி தோட்டம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி, ரூ.15 லட்சம் மதிப்பில் நரசீபுரம் சாலை முதல் பந்திபள்ளம் பொன்னுச்சாமி தோட்டம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி, ரூ.10 லட்சம் மதிப்பில் புள்ளாக்கவுண்டன்புதூரில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, புள்ளாக்கவுண்டன் புதூரில் ரூ.33.70 லட்சம் மதிப்பில் மயானம் முதல் சின்னசாமி தோட்டம் – பெரும்பள்ளம் வரை சாலை மேம்பாடு செய்யும் பணி என மொத்தம் ரூ. 3.04 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.