• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

1672 லிட்டர் காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு- 79 கடைகளுக்கு நோட்டீஸ்

February 26, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உணவு பொருட்கள் விற்கும் கடைகளில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை மாவட்டம் முழுவதும் முக்கிய பகுதிகளில் கடந்த 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் அதிரடியாக குளிர்பானங்கள் மற்றும் இதர உணவு பொருட்கள் போன்றவை காலாவதியாகியுள்ளதா? என்று மொத்த விற்பனையாளர்கள், குடோன்கள், உணவகங்கள், பேக்கரிகள், மளிகை கடைகள், பெட்டி கடைகள் மற்றும் அனைத்து வகையான உணவு பொருட்கள் விற்கும் கடைகளில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு செய்யப்பட்ட 353 கடைகளில் 64 கடைகளில் ரூ.61 ஆயிரத்து 995 மதிப்புள்ள 1672 லிட்டர் காலாவதியான குளிர்பானங்களும், 42 கடைகளில் ரூ.86 ஆயிரத்து 830 மதிப்புள்ள 312 கிலோ கிராம் இதர உணவுபொருட்களும் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டு உடனடியாக பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேற்படி குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்கள் காலாவதியான நிலையில் விற்பனை செய்த 79 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இக்களஆய்வின் போது தமிழக அரசால் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உபயோகத்தில் இருந்தது கண்டறியப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதுடன் அதனை வைத்திருந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.77 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் படிக்க