May 11, 2021
தண்டோரா குழு
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில்
திமுக ஆட்சியமைத்த பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் தேர்தலில் வென்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றனர்.
இந்நிலையில்,சபாநாயகர் பதவிக்கு ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இன்று சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தொடங்கிய நிலையில், அப்பாவு தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக போட்டியின்றி தேர்வானார். துணை சபாநாயகராக பிச்சாண்டி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.