• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

1500 தொழிலாளர்களுக்கு ரூ.44.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் வழங்கல்

December 1, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 1500 தொழிலாளர்களுக்கு ரூ.44.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது:

தமிழகம் முழுவதும் இன்று கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியங்களில் பதிவு பெற்ற 50 ஆயிரத்து 751 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் முதலவரால் துவக்கி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள 425 பயனாளிகளுக்கு ரூ.7.06 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு ரூ.9000 மதிப்பிலான மகப்பேறு உதவித்தொகை, 108 பயனாளி ரூ.27 லட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகை, ஒரு பயனாளிக்கு ரூ.500 மதிப்பில் கண்கண்ணாடி, 963 பயனாளிகளுக்கு ரூ.10.03 லட்சம் மதிப்பில் ஓய்வூதியம் என மொத்தம் 1500 தொழிலாளர்களுக்கு ரூ.44.19 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவித் தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் தொழிலாளர் நலத்துறை(சமூக பாதுகாப்பு திட்டம்) பாலதண்டயுதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க