• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குஜராத்தில் 15 வயதில் B Tech பட்டம் பெற்ற இளம் மாணவன்

January 13, 2018 தண்டோரா குழு

குஜராத்தில் 15வயதுடைய மாணவன் கல்லூரியில் பட்டம் பெற்ற சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் குஜராத் டெக்னாலஜிக்கல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் ஏழாவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை(ஜன 12)நடைப்பெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 5,0405 மாணவர்கள் கலந்துகொண்டார்.

அதில்,சுமார் 4,363 மாணவர்கள் இளநிலை, முதுநிலை மற்றும் டாக்டர் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்றவர்களில் நிர்பேய் தாக்கர்(15), B Tech பாட பிரிவில் உள்ள மின் பொறியியல் பாடத்தில் பட்டம் பெற்றார். இளம் வயதில் B Tech பட்டம் பெற்ற பெருமை இவரையே சேரும்.

குழந்தை மேதையான நிர்பெய், கடந்த 2015ம் ஆண்டு, தனது 12 வயதில் 10ம் வகுப்பை முடித்தார். பிறகு, கடந்த 2016ம் ஆண்டு, நடந்த 12ம்வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்றார். நிர்பெயின் கல்வி திறனைக் ஆண்ட, ஜி.டி.யூ கல்வி கவுன்சில் B Tech பாடத்தில் சேர்ந்து படிக்க ஒப்புதல் வழங்கியது.

இதனையடுத்து, நிர்பெய் மின் பொறியியல் பாடத்தை தேர்ந்தெடுத்து,அதில் சேர்ந்துள்ளார். இறுதி தேர்வில், நிர்பெய் 8.23 CGPA பெற்று, B Tech பாட பிரிவில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க