• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மே 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போக்குவரத்து தொழிற் சங்கங்கள்

May 5, 2017 தண்டோரா குழு

ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“ஊதிய ஒப்பந்தத்தை முறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை போராட்டத்திற்கு தயார்படுத்தும் வகையில் வரும் 9-ம் தேதி அனைத்து மண்டல தலைமையகங்களிலும் வாயிற்கூட்டம் நடத்தப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் இப்போராட்டத்தால் 90 சதவிகித பேருந்துகள் இயங்காது.

போக்குரவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த முடிவு, ” என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க