February 12, 2018
தண்டோரா குழு
பொலிவியா நாட்டில் ‘ரோமியோ’ என பெயரிடப்பட்டுள்ள ‘சேவென்காஸ்’ வகை தவளைதான் அந்த இனத்தின் கடைசி ஆண் தவளை என கருதப்படுகிறது.
ஆகையால் இந்த இதனால், இந்தத் தவளையை வைத்து இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற பெண் தவளை ஒன்றை, அந்த நாட்டு விஞ்ஞானிகள் வலைவீசித் தேடி வருகின்றனர். இதற்காக, பொலிவியா நாட்டில் அந்த நாட்டு அரசு சுமார் 15,000 மில்லியன் டாலர்களை நிதியாகத் திரட்டியுள்ளது.
இதுமட்டுமின்றி, இதற்காகவே தனி இணையதளம் ஒன்றை துவங்கி அதில், அந்த ரோமியோ தவளை தனக்கு பெண் வேண்டும் என்று பேசுவது போன்று ஒரு வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது.