• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

15வது வார்டு பகுதியில் அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு முதல்கட்டமாக தீர்வு -காங்கிரஸ் வேட்பாளர்

February 9, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 15வது வார்டு பகுதியில் குடிதண்ணீர், சாலை வசதி தெருவிளக்கு போன்ற அத்தியாவசிய பிரச்சனைகளுக்கு முதல்கட்டமாக தீர்வு காண்பேன் என மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சாந்தாமணி உறுதியளித்துள்ளார்.

கோவை மாநகராட்சி 15 வது வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாந்தாமணி போட்டியிடுகிறார். வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சாந்தாமணி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்,

கடந்த 10 ஆண்டுகளாக வார்டில் எந்தவிதமான அத்தியாவசிய பணிகளும் நடைபெறவில்லை எனவும் நான் வெற்றி பெற்றால் இந்த வார்டில் குடிநீர் சாலை வசதி சாக்கடை கால்வாய் மற்றும் தெருவிளக்கு போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பச்சைமுத்து, தி.மு.க 15 வது வார்டு வட்டசெயலாளர் சந்திரசேகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க