• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

14 தங்க பதக்கங்கள் வென்ற நாகப்பட்டின மீனவரின் மகளுக்கு சத்குரு பாராட்டு!

July 9, 2023 தண்டோரா குழு

நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவரின் மகளான ஐஸ்வர்யா, இளங்கலை மீன்வள அறிவியல் படிப்பில் 14 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், சத்குரு அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யாவிற்கு தன் வாழ்த்துகளை பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

“ஐஸ்வர்யாவுக்கு என் பாராட்டுகளும் நல்வாழ்த்துகளும். என் வருங்காலத்தை நானே உருவாக்க வேண்டும் என்ற உன் உறுதியால் உன் சமூகத்திற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளாய். உண்மையாகவே ஊக்கமளிக்கிறது. ஆசிகள். –சத்குரு”

டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் நேற்று நடைபெற்ற எட்டாவது பட்டமளிப்பு விழாவில் தங்கம் வென்ற மாணவி ஐஸ்வர்யா கூறுகையில், “தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் உதவியுடன், மீனவர் ஒதுக்கீட்டின் கீழ் படித்தேன். நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று இந்த படிப்பில் இணைந்தேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க