• Download mobile app
31 Oct 2025, FridayEdition - 3551
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

130 ஆண்டுக்குப் பிறகு நூலகத்திற்குத் திருப்பித் தரப்பட்ட புத்தகம்

December 10, 2016 தண்டோரா குழு'

இங்கிலாந்தில் ஹீரேஃபோர்ட் கதேட்ரல் பள்ளி நூலகத்தில் இருந்து கடனாக வாங்கிய புத்தகம் 130 ஆண்டுகளுக்குப் பிறகு மன்னிப்புக் கடிதத்தோடு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) திருப்பி அளிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் ஸாமர்செட் நகரில் வசிப்பவர் ஆலிஸ் கில்லேட் (77). இவர் தனது வீட்டில் உள்ள புத்தக அலமாரியைச் சுத்தம் செய்தபோது, டாக்டர் வில்லியம் பி. கார்ப்பெண்டர் என்பவர் எழுதிய “நுண்ணோக்கி மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள்” (The Microscope and its Revelations) என்னும் புத்தகத்தைக் கண்டெடுத்துள்ளார்.

1,௦௦௦௦ பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தைத் திறந்து பார்த்தபோது, அது ஹீரேஃபோர்ட் கதேட்ரல் பள்ளியின் நூலகத்தில் இருந்து 1886ம் ஆண்டு தனது தாத்தா ஆர்தர் பாய்காட் கடனாக வாங்கியது என்பது தெரியவந்துள்ளது.

அப்பள்ளியில் அவருடைய தாத்தா ஆர்தர் பாய்காட்1886 முதல் 1894 வரை படித்து வந்தார். அவர் புகழ்பெற்ற இயற்கை மற்றும் நோயியல் மருத்துவர் ஆவார்.

அப்புத்தகத்தைக் கண்டெடுத்த ஆலிஸ் அதை ஹீரேஃபோர்ட் கதேட்ரல் பள்ளிக்குத் திருப்பித்தருவதுதான் முறையானது என்று அப்பள்ளிக்கு மன்னிப்புக் கடிதத்துடன் அந்தப் புத்தகத்தை வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்தார்.

அந்த கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது:

இக்கடிதத்துடன் அனுப்பியிருக்கும் இப்புத்தகம் உங்கள் பள்ளி நூலகத்தில் இருந்து கடனாகப் பெற்றது. உங்களுடைய பள்ளியின் முன்னாள் மாணவர் பேராசிரியர் ஏ.இ. பாய்காட் எடுத்திருக்கிறார். ஆனால், அவர் அதனைத் திருப்பி தராமல்விட்டார்.

இந்தப் புத்தகம் இப்பள்ளிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் புத்தகம் இல்லாமல் இப்பள்ளி எப்படிச் சமாளித்து என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருந்தது.

நூலகத்திலிருந்து எடுக்கப்படும் புத்தகங்கள் தாமதமாக திருப்பி தரும்போது அதற்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால், அப்பள்ளியில் அபராதம் கிடையாது. ஒருவேளை அபராதம் செலுத்த வேண்டி இருந்தால் 7,446 பவுண்ட்ஸ் அதாவது இந்தியச் செலவாணிப்படி ஆலிஸ் ரூ. 6,31,859 செலுத்த வேண்டியிருக்கும்.

இது குறித்து ஹீரேஃபோர்ட் கதேட்ரல் பள்ளி சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “13௦ ஆண்டுகளுக்கு முன் ஹீரேஃபோர்ட் கதேட்ரல் பள்ளியின் நூலகத்தில் இருந்து கடனாகப் பெற்ற புத்தகம் மீண்டும் பத்திரமாகவும் நல்ல முறையில் திரும்பி வந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க