• Download mobile app
27 Jul 2024, SaturdayEdition - 3090
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி

February 1, 2024 தண்டோரா குழு

கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 24 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சி துவக்க விழாவில் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக பெங்களுருவை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீனு பிள்ளை கலந்து கொண்டு பேசுகையில், தற்போது ஆடை வடிவமைப்பு துறையில் நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும்,குறிப்பாக இளம்பெண் தொழில் முனைவோர்களாக இதில் பெண்கள்.சாதித்து வருவதாக கூறினார்.நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் யசோதா, டீன் சாந்தா,துறை தலைவர் ராதிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,ஆடை வடிவமைப்பு துறையை சேர்ந்த மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு அணிவிக்கப்பட்டு ஆடை அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள்,மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர்.

மேலும் படிக்க