February 24, 2021
தண்டோரா குழு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
இம்மாதத்திற்கான கோவை மாவட்ட விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம் நாளை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முதன்மை கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்கள் அளிக்கலாம்.
கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் விவசாயிகள் முறையீட்டுக்கூட்டம் நடைபெறாமல் இருந்தது. அதன் பின் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இணையதளம் மூலம் விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே 11 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நேரடியாக மீண்டும் நடைபெற உள்ளது.