• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவை மாவட்டம் 3ஆம் இடம்

May 30, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற்ற 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.2சதவிகிதத்துடன் கோவை மாவட்டம் 3ஆம் இடத்தை பெற்றுள்ளது.இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பொதுத்தேர்வை சந்தித்த 35ஆயிரத்து 85 பேரில் 33ஆயிரத்து 747 பேர் வெற்றிப்பெற்றுள்ளதாகவும், அதில்,மாணவர்கள் 94.21 சதவிகிதமும்,மாணவிகள் 97.74சதவிகிதமும் பெற்றுள்ளதாக தெரிவித்த அதிகாரிகள்,மாற்றுத்திறனாளிகள் பிரிவில் கண் பார்வை இழந்தவர்கள் 100 சதவிகித தேர்ச்சியும், காது மற்றும் வாய்ப்பேச முடியாதவர்கள் 90.91சதவிகிதமும்,உடல் ஊனமுற்றோர்கள் 95சதவிகிதமும், மற்ற பிவில் 85.71சதவிகிதமும் தேர்ச்சி விகிதம் உள்ளதாக தெரிவித்தனர்.

தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 99.51சதவிகித தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள நிலையில்,அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.93 சதவிகிதமாகவும்,மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 88.59ஆக குறைவாக உள்ளது.மேலும்,3ஆம் பாடப்பிரிவான கலைப்பிரிவில் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளதால்,அந்த பாட பிரிவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும்,மாணவர்கள் அதிகமாக அந்த பாடப்பிரிவில் சேர்க்கை உள்ளதால் இந்த நிலை உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.தனியார் பள்ளிகளை விட அரசுப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க