• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஃபாரின் விநாயகர் கோவில் ஆண்டு விழாவில், காட்சிபடுத்தபட்டிருந்த மூலிகைகள் கண்காட்சி

September 10, 2022 தண்டோரா குழு

ஃபாரின் விநாயகர் கோவில் ஆண்டு விழாவில், காட்சிபடுத்தபட்டிருந்த மூலிகைகள் கண்காட்சி

கோவை வரதராஜபுரம், உப்பிலிபாளையம் போஸ்ட்., எல்.ராமசாமி நகர் பகுதியில் உள்ள ஃபாரின் விநாயகர் கோவில் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவில் திருவண்ணாமலை சித்த யோகியின் பல்வேறு யோகா குறித்த விளக்கவுரை வழங்கப்பட்டது.

கோவையில் வரதராஜபுரம் உப்பிலிபாளையம் போஸ்ட். எல்.ராமசாமி நகர் பகுதியில் உள்ள ஃபாரின் விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீஅகத்திய மகரிஷி,ஸ்ரீ கோமாதா,ஸ்ரீ காமதேனு, ஸ்ரீ நந்தி,ஸ்ரீ ஐஸ்வரேஸ்வரர் முதலாம் ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவில் நிர்வாகிகள்,எல்.ராமசாமி நகர்,கே.ஜி.கார்டன் நகர் நல குழு மற்றும் கோவில் பக்தர்கள் இணைந்து நடத்திய விழாவிற்கான ஏற்பாடுகளை,கோவில் தலைவர் திருமதி.இராதாமணி,செயல் தலைவர் ஹரிவரதராஜன்,மற்றும் பொருளாளர் சுந்தர்ராஜன் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.விழாவில் முன்னதாக,கோமாதா பூஜை மஹாகணபதி , ஐஸ்வர்யேஸ்வரர் , ஸ்ரீ அகத்திய மகரிஷி , ஸ்ரீ கோமாதா , ஸ்ரீ காமதேனு மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தமிழ்முறைப்படி சிறப்பு ஹோமத்தை, செந்தமிழ் ஆகம செம்மல் பாம்பன் அடிமை பெரிய குளம் குமார குருக்கள் ,மற்றும் ஆனந்தகோகுல் பட்டாச்சாரியார் ஆகியோர் நடத்தினர்.

தொடர்ந்து மஹா கலசங்கள் புனிதநீர் அபிஷேகம்,அலங்கார பூஜைகள், மஹா தீபாராதனை,பட்டீஸ்வரர் கைலாய வாத்திய குழுவினரின் சிவ அழைப்பு கைலாய மேளம், சிவனடியார்களின் சிறப்பு சிவ பாராயணம் நடைபெற்றது… வாசியோகம் மற்றும் தலைகீழாக யோகா செய்தபடி சாப்பிடும் யோகா செயல்முறை மற்றும் ருத்ரதாண்டவத்தை திருவண்ணாமலை சித்தயோகி இரா.பழனி அரங்கேற்றினார். விழாவின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு சித்த மருத்துவ அறக்கட்டளை சார்பாக, மருத்துவர் கதிர்வேல் ஒருங்கிணைத்த அரிய வகை மூலிகைகள் கண்காட்சியை தெற்கு வட்டாட்சியர் சரண்யா,கோவில் நிர்வாக தலைவர் திருமதி இராதாமணி ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இந்த மூலிகை கண்காட்சியில் பல்வேறு நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகை செடிகள் காட்சிபடுத்த பட்டிருந்தன.தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 8 வடிவ ராசி செடிகள் நடை வலம் உடல் நலம் மற்றும் ஆன்மீக பயன்கள் குறித்து சிறு உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட சிவனடியார்களுக்கு 45 வேஷ்டி,துண்டுகளை துணை ஆட்சியர் சுரேஷ் வழங்கினார்.

மேலும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு,கோளறு பதிகம், பகவத்கீதை, மற்றும் குடும்ப சுபிட்சத்திற்காக பூஜையில் வைக்கப்பட்ட ருத்திராட்சம்,கோவில் பூஜை விவரம் குறித்த குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க