• Download mobile app
02 Oct 2022, SundayEdition - 2426
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

தள்ளாடும் முதலீட்டை தலைநிமிர்த்த ஒருஉன்னதமான வாய்ப்பளிக்கும் சமீபத்திய மதிப்பீடு

July 8, 2022 தண்டோரா குழு

தள்ளாடும் முதலீட்டை தலைநிமிரச் செய்ய தற்போதைய மதிப்பீடுகள் ஒருசிறப்பான வாய்ப்பாக உள்ளது என்கின்றனர் டிஎஸ்பி மேலாளர்கள்.தற்போதைய நிலையில், வங்கி மற்றும் நிதிசேவைகள், வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள், மருத்துவம் மற்றும் சில கட்டுமானபொருள் தயாரிப்பு கம்பெனிகள் முன்னேற்றம் காணும் துறைகளாக உள்ளன. தகவல் தொழில்நுட்பம், உலோகங்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டிய நிலை உள்ளது.

நிதிச் சந்தையில்,மாலுமிகளாகதிகழும் டிஎஸ்பி இன்வெஸ்ட்மென்ட்மேலாளர்கள், ஒவ்வொரு காலாண்டிலும் முதலீட்டாளர்களுக்கு தங்களது உபரியாக உள்ளநிதியை, தேவையான நிதி மேலாண்மை திட்டத்தில் முதலீடு செய்ய யுக்திகளை தருகின்றனர்.இந்த மாலுமிகள் நிதிச் சந்தை நிலவரத்தை அலசி ஆராய்ந்து, விரிவான வருவாய்திட்டத்தையும், மதிப்பீடு, வளர்ச்சி உள்ளிட்ட சொத்து வகையை வகுக்கின்றனர்.

இந்த மாலுமிகளைபொருத்தவரை, வாகன துறை குறைவான வருவாய் கொண்டதாகவும், கீழ்நோக்கி செல்லும்வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தற்போது ஸ்டீல் விலை குறைந்து வருவதால் லாபம்அதிகரித்து, தேவையும் அதிகரித்து வருவதால் மறு தர ஆய்வு செய்துள்ளனர்.மருந்துகள் துறையும்அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. இவற்றின் மதிப்பீடுகள் குறைவாக இருப்பதால்,சுகாதார துறையிலும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன.

பங்குச் சந்தையின்மதிப்பீடும் 18 மாதங்களுக்கு பின் நல்ல நிலையில் இல்லாதது போன்ற தோற்றத்தை தருகிறது.தற்போதைய மதிப்பீடு தள்ளாடும் முதலீட்டிற்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது.

நிப்டியின்மதிப்பீடு, நல்ல வருவாய் ஈட்ட ஒரு இனிப்பான வாய்ப்பாக உள்ளது. கோவிட் தொற்றுக்குபின் மறுமலர்ச்சியாக மதிப்பீடுகள் உயர்ந்தது; குறைவான வட்டி விகிதம் தற்போது மாறிவருகிறது. மதிப்பீட்டின் அடிப்படையிலான முதலீடு ஒரு சரியான விகிதமாக மாறியுள்ளது. என்எஸ்இ 500 பங்குகள் 30மூமேலாக சரிப்படுத்திக் கொண்டுள்ளது. இவை குறைவான மதிப்பீட்டில் சரியான தேர்வுக்குவாய்ப்பாக உள்ளன. குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்ய தேர்வு செய்யப்பட்ட முதலீட்டுக்குகவர்ச்சிகரமான நிலையில் உள்ளன.

என்எஸ்இ 200 குறியீட்டில் 20% மட்டுமே நீண்ட காலமுதலீட்டின் அடிப்படையில் 200 நாள் சராசரி விலையை விட அதிகமாக உள்ளன. கடந்தகாலங்களில் இது போன்ற நிலையில் திரும்புகின்றன.

உலக அளவிலும் உள்நாட்டுஅளவிலும் பொருளாதாரம் பல்வேறாக பிரிந்துள்ளது. உள்நாட்டு பொருளாதாரம் வலிமையானதாகஇருந்தாலும் உலக பொருளாதாரம் பலவீனமாக உள்ளது. இந்த பின்னணியில் முதலீட்டு முடிவுகளைமேற்கொள்வதில் மதிப்பீடு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, நேவிகேட்டர்ஸ்,உள்நாட்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டு, முதலீட்டுக்கு இது ஒரு நல்ல தருணம் என பரிந்துரைசெய்கின்றனர். கடன் பத்திரங்களை பொருத்தவரை, வட்டி விகிதம் உயர வாய்ப்புஉள்ளதால், குறைந்த கால மற்றும் முதிர்வு பெரும் பத்திரங்களை தற்போதைக்குவைத்திருக்கலாம்.

மேலும், பழமையானமுறையில் மேற்கொள்ளப்படும் யுக்திகளின் படி, பங்குகளில் 20 சதமும், மாற்று மற்றும்கலப்பின நிதிகளுக்கு 15 சதமும், மீதமுள்ள 65 சதம் கடன் பத்திரங்களிலும் முதலீடுசெய்யலாம். நடுத்தர யுக்தியின்படி, 50 சதம் பங்குகளிலும், மாற்று மற்றும் கலப்பினநிதிகளில் 10 சதம், 40 சதம் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். தீவிரமுதலீட்டு யுக்திகளை கொண்டுள்ளவர்கள், 60 சதம் பங்குகளிலும், 15 சதம் மாற்றுமற்றும் கலப்பின முதலீட்டிலும், 25 சதம் கடன் பத்திரத்திலும் முதலீடு செய்யலாம் எனஅவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் படிக்க