April 25, 2025
தண்டோரா குழு
கோவை ஆனைக்கல் பண்ணாரியம்மன் திருக்கோவிலில் 15-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கோவை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய ஜான் அன்னதானம் வழங்கினார்.
கோவை வடக்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு தலைவர் ஆரோக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் 72வது பிறந்த நாளை முன்னிட்டு 72 ஆலயங்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி பல்வேறு கோவில்கள்,தேவாலயங்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றார்.
அதன்படி கோவை சரவணம்பட்டி கீரணத்தம் காபி கடை பிரிவில் பிரசித்தி பெற்ற ஆனைக்கல் பண்ணாரி அம்மன் திருக்கோவில் 15வது ஆண்டு விழாவை முன்னிட்டு சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அப்போது கார்த்திக், இத்திருக்கோயில் நிர்வாகிகள், கழகபொறுப்பாளர்கள்,
உடன்பிறப்புகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட 1000த்திற்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.