September 27, 2016
தண்டோரா குழு
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் உள்ள தாபு கலான் என்னும் கிராமத்தில் 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டதற்கு முந்தைய நாளில் மூதாட்டி வெளியில் படுத்து தூங்கியதாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.குடும்பத்தினர் காலையில் பார்த்த போது, மூதாட்டி மாயமாகியிருந்தார். அவரை தேடிப்பார்த்த போது, அருகில் உள்ள வயலில், அரை நிர்வாண நிலையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இது தொடர்பாக மரணமடைந்த பாட்டியின் பேரன் கூறுகையில், தனது பாட்டி கற்பழித்து கொல்லப்பட்டார். மேலும் போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு கற்பழிப்பு குறித்த புகாரினை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.